Datei:Royal_palace.jpg Datei:Gal_Viharaya_01.jpg Datei:358407Polonnaruwa.jpg Datei:358402_Gal_Vihara.jpg Datei:358401_Gal_Vihara.jpg Datei:358405_Gal_Vihara.jpg File:Polonnaruwa.jpg Archivo:Galvihara-sunny2.jpg Fichier:Polonnaruwa_02.jpg Fichier:Vatadage.jpg Fichier:Gal_Viharaya_02.jpg File:Gal_Vihariya_-_3.jpg File:Polonnaruwa-temple11.jpg File:Polonnaruwa-temple16.jpg File:Polonnaruwa-galvihara7.jpg File:Polonnaruwa-palau1.jpg File:Kiri_Vihara_01.jpg Bestand:Galvihara.jpg Plik:Polonnaruwa_Vatadage.jpg Berkas:Polonnaruwa_01.jpg
Source: Wikipedia

பொலன்னறுவை (පොළොන්නරුව (වක්‍රෝත්තිහරණය))

பொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும். தற்பொழுது இது பொலன்னறுவை மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். அனுராதபுரத்திற்கு பாதுகாப்பு வழங்குமொரு அரணாகவிருந்த இந்நகரை, சோழர் இலங்கையின் தலைநகராக தெரிவுசெய்தனர். பின்னர் இந்நகரம் சிங்கள மன்னர் காலத்திலும் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது.
இந்த நகரைச் சுற்றி, பல பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இவை பொலன்னறுவையில் வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத் தேவைக்காகவும், சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்காகவும் பயன்பட்டன. சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக இங்கே பல பாரிய பௌத்த விகாரைகளும் , இந்து கோவில்களும் இருக்கின்றன.
கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக்கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது. அரண்மனைகள், மாளிகைகள், கோவில்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், மருத்துவமனைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன.

  1. 1 இவற்றையும் பார்க்கவும்

Comments

So far there are no reviews about the location.

Share your experience with others and write the first comment about the location

பொலன்னறுவை

➴ Coordinates: 7° 57‘ N, 81° 0‘ E
Tags
Weather
2. Mai 2025
N/A °
N/A
N/A
N/A
Wind
N/A k/h
Humidity
N/A
Visibility
N/A km